Thursday 1 September 2016

tnpsc group4 2016 questions


6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் முக்கிய வினா விடைகள்:

1.திருவருட்பா இயற்றியவர் - ராமலிங்க அடிகளார்
2.திருவருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படுபவர் - ராமலிங்க அடிகளார்
3.ராமலிங்க அடிகளார் பிறந்த ஊர் - கடலூர் மாவட்டம் மருதூர்
4.ராமலிங்க அடிகளார் எழுதிய நூல்கள் - ஜீவகாருண்யஒழுக்கம், மனுமுறைகண்டவாசகம்
5."வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" - ராமலிங்க அடிகளார்
6.ஆர்வலர் பொருள் கூறு - அன்புடையவர்
7.என்பு பொருள் கூறு - எலும்பு
8.நண்பு பொருள் கூறு - நட்பு
9.வன்பாற்கண் பிரித்தெழுது - வன்பால் + கண்
10. திருவள்ளுவர் காலம் - கி.மு 31
11. தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்படுபவர் - உ.வே.சாமிநாதன்
12.குறிஞ்சிப்பாட்டு நூலின் ஆசிரியர் - கபிலர்
13.உ.வே.சா - உத்தமதானபுரம் வேங்கடசுப்புவின் மகனார் சாமிநாதன்
14.டாக்டர் உ.வே.சா நூல்நிலையம் - 1942 சென்னை பெசண்ட் நகர்
15. உ.வே.சா அஞ்சல்தலை வெளியிட்டது - 2006
16.ஜப்பானியர் வணங்கும் பறவை - கொக்கு
17.காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலை - ஓரிகாமி
18.சடகோ தோழி - சிசுகோ
19.டென் லிட்டில் பிங்கர்ஸ் - அரவிந்த குப்தா
20.தமக்குரியர் பிரித்தெழுது - தமக்கு + உரியர்
21. நாய்க்கால் சிறுவிரல்போல்... எனத்தொடங்கும் பாடலை இயற்றியவர் - சமணமுனிவர்
22.அணியர்  பொருள் கூறு - நெருங்கி இருப்பவர்
23.சேய் பொருள் கூறு - தொலைவு
24.நாலடி நானூறு என்று அழைக்கப்படும் நூல் - நாலடியார்
25.பதினெண் என்றால் - பதினெட்டு
26.மகாகவி என அழைக்கப்படுபவர் - பாரதியார்
27.தமிழ்மகள் என அழைக்கப்படுபவர் - ஔவையார்
28.ஞாலம் பொருள் கூறு - உலகம்
29.நிலத்திலும் அடர் உப்புத்தன்மை உள்ள நீரிலும் வாழும் பறவை - பூநாரை
30.வெயில் கூடுதலாக இருக்கும்போது பறவைகள் இடத்தை மாறுவது - வலசைபோதல்
31.இந்தியாவில் உள்ள பறவைகளின் எண்ணிக்கை - 2400
32.வடுவூர் பறவைகள் புகலிடம் எங்கு உள்ளது - தஞ்சாவூர் மாவட்டம்
33.பாம்பினம், உலகில் மனித இனம் தோன்றுவதற்கு எத்தனை ஆண்டுக்கு முன்பு தோன்றியது - பத்துக்கோடி
34.பாம்பு வகையில் நச்சுத்தன்மை கொண்டது - 52 வகை
35.நல்லபாம்பின் நஞ்சு கொண்டு தயாரிக்கப்படும் மருந்து - கோப்ராக்சின்
36.இந்திய வன விலங்கு பாதுகாப்பு சட்டம் - 1972
37. வண்மை பொருள் கூறு - கொடைத் தன்மை
38.வன்மை  பொருள் கூறு - கொடுமை
39.மனைக்கு விளக்கம் மடவார்... எனத்தொடங்கும் பாடலை இயற்றியவர் - விளம்பிநாகனார்
40.மடவார் பொருள் கூறு - பெண்கள்
41.தகைசால் பொருள் கூறு - பண்பில் சிறந்த
42.கடிகை பொருள் கூறு - அணிகலன்
43.வாய்மொழியாகப் பரவும் நாட்டுப்புறப் பாடல்களையும் கதைகளையும் - வாய்மொழி இலக்கியம்
44.சென்னை போன்ற பெருநகரங்களிலும் மக்கள் பாடும் 'கானப் பாடல்' - நாட்டுப்புறப் பாடல்
45.சுவாமி விவேகானந்தர் இயற்ப்பெயர் - நரேந்திரதத்
46.அறிவை வளர்க்கும் அற்புதக் கதைகள் - ஜானகிமணாளன்
47.ஆனம் பொருள் கூறு - குழம்பு
48.நாழி பொருள் கூறு - தானியங்கள் அளக்கும் படி
49.ல, ழ, ள மூன்றையும் வேறுபாடு இல்லாமல் ஒலிப்பது - மயங்கொலிப் பிழை
50.தமிழ்ச்சொற்கள் எத்தனை வகைப்படும் - நான்கு

 6ம் வகுப்பு அறிவியல் முதல் பருவம் முக்கிய வினா விடைகள்:

1.தமிழ் நாட்டில் எந்த மாவட்டத்தில் இருந்து மாம்பழக்கூழ் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது - கிருஷ்ணகிரி
2.மருத்துவ குணம் நிறைந்த தாவரங்கள் - மூலிகைகள்
3.மஞ்சள் காமாலை நோய் குணப்படுத்துவது - கீழாநெல்லி
4.தொண்டை கரகரப்பை நீக்குவது - மிளகு
5.இந்தியாவின் நறுமண தோட்டம் - கேரளா
6.தரைகீழ்த்தண்டுக்கு எடுத்துக்காட்டு - இஞ்சி, மஞ்சள்
7.சாக்குப்பை தயாரிக்கப் பயன்படும் தாவரம் - சணல்
8.தண்டு நார்கள் - வாழை நார், சணல் நார்
9.இலை நார்கள் - கற்றாழை, அன்னாசி
10.மேற்புற நார்கள் - பருத்தி, தேங்காய், இலவம் பஞ்சு
11. தைலம் மற்றும் காகிதம் செய்ய பயன்படும் மரம் - யூகலிப்டஸ்
12.கிரிக்கெட் மட்டை தயாரிக்க பயன்படும் மரம் -வில்லோ
13.டென்னிஸ், ஹாக்கி மட்டை தயாரிக்க பயன்படும் மரம் - மல்பரி
14.செம்மரம் எனப்படும் ரெட்வுட் மரங்களின் உயரம் - 115 மீட்டர்
15.உணவில் உள்ள உடலுக்கு தேவையான சத்துக்கள் - ஊட்டச்சத்துக்கள்
16.உடலுக்கு வளர்ச்சி அளிப்பவை - புரதங்கள்
17.பாலில் உள்ள நீரின் அளவு - 87%
18.புரத குறைபாட்டு நோய் (1-5 வயது) - குவாஷியாக்கர்
19..புரத குறைபாட்டு நோய் - மராஸ்மஸ்
20.வைட்டமின் A குறைபாட்டு நோய்  - மாலைக்கண்
21. வைட்டமின் C குறைபாட்டு நோய்  - ஸ்கர்வி
22.அயோடின் குறைபாட்டு நோய் - முன்கழுத்துக் கழலை
23.அனைத்து ஊட்டச்சத்துக்களும் சரியான விகிதத்தில் கலந்துள்ள உணவு - சரிவிகித உணவு
24.தற்சார்பு உணவூட்டத்திற்கு எடுத்துக்காட்டு - பசுந்தாவரங்கள், யூக்ளினா
25.ஒட்டணி உணவூட்டத்திற்கு எடுத்துக்காட்டு - கஸ்குட்டா
26.சாறுண்ணி உணவூட்டத்திற்கு எடுத்துக்காட்டு - காளான்
27.பூச்சி உண்ணும் தாவரங்கள் - நெபந்தஸ், டிரோஸீரா, யூட்ரிகுலேரியா
28.கத்திரிக்காயில் காணப்படும் அமிலம் - அஸ்கர்ப்பிக் அமிலம்
29.வெப்ப உமிழ் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு - தூய்மையாக்கி நீரில் கரைதல்
30.வெப்ப கொள் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு - அமோனியம் குளோரைடு நீரில் கரைதல்
31.FPS - அடி, பவுண்டு, வினாடி
32.பன்னாட்டு அலகுமுறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு - 1960
33.நீளத்தின் அலகு - மீட்டர்
34.நிறையின் அலகு - கிலோகிராம்
35.காலத்தின் அலகு - வினாடி
36.நேர்கோட்டு இயக்கம் எடுத்துக்காட்டு - மின்தூக்கியின் இயக்கம்
37.ரோபோவை உருவாக்கியவர் - ஐசக் அசிமோ
38.இயற்கை காந்தம் என அழைக்கப்படுவது - மாக்னடைட்
39.காந்த ஊசி பெட்டியில் ஓய்வு நிலையில் கந்த ஊசி - வடக்கு தெற்கு திசையிலே நிற்கும்
40.1600 ல் புவி மிகப்பெரிய காந்தமாக செயல்படுகிறது என்று கூறியவர் - வில்லியம் கில்பர்ட்

No comments:

Post a Comment