Friday 16 September 2016

6ம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் முக்கிய வினா விடைகள்:

1.படிறு பொருள்கூறு - வஞ்சம் 
2.அகன் பொருள்கூறு - அகம் (உள்ளம்) (அகன் - கடைசி எழுத்து மாறி உள்ளதால் இது கடை போலி )
3.துவ்வாமை பொருள்கூறு - வறுமை 
4.அல்லவை பொருள்கூறு - பாவம் 
5.மறுமை பொருள்கூறு -   மறுபிறவி 
6.இனிதீன்றல் பிரித்தெழுதுக - இனிது + ஈன்றல் 
7.மக்கள் கவிஞர் என அழைக்கப்படுபவர் - பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்
8.செய்யும் தொழிலே தெய்வம் என தொடங்கும் பாடலை இயற்றியவர் -  பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்
9. பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் பிறந்த ஊர் - செங்கப்படுத்தான் காடு 
10. சிற்பக்கலை கொழிக்கும் ஊர் - கும்பகோணம் 
11.ஐராவதீசுவார் கோவில் உள்ள இடம் - தாராசுரம்(2ம் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது ) 
12. முப்புரம் எரிந்தவன் கதை - திரிபுராந்தகன் 
13.யானை உரி போர்த்தவர் - கஜசம்ஹார மூர்த்தி 
14.தாராசுரம் கோவிலில் விமானத்தோற்றம் வான்வெளி ரகசியத்தைக் காட்டுவதாக கூறியவர் - காரல் சேகன் 
15..தாராசுரம் கோவிலை மரபு அடையாள சின்னமாக அறிவித்தது - யுனெஸ்கோ 
16.கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் என தொடங்கும் பாடலை இயற்றியவர் - ராமசந்திரக் கவிராயர் 
17.பதுமத்தான் பொருள்கூறு - தாமரையில் உள்ள பிரமன் 
18.துன்பத்தையும் நகைச்சுவையுடன் பாட வல்லவர் -  ராமசந்திரக் கவிராயர் 
19.அந்தக் காலம் இந்தக் காலம் என்ற பாடலை இயற்றியவர் - உடுமலை நாராயணகவி 
20.பகுத்தறிவுக் கவிராயர் என்று அழைக்கப்படுபவர் - உடுமலை நாராயணகவி
21.போஸ்ட் ஆபீஸ் தமிழ் சொல்லாக மாற்று - அஞ்சல் நிலையம் 
22.டிவி தமிழ் சொல்லாக மாற்று - தொலைக்காட்சி 
23.டிபன் தமிழ் சொல்லாக மாற்று - சிற்றுண்டி 
24.டீ தமிழ் சொல்லாக மாற்று - தேநீர் 
25.டெலிபோன் தமிழ் சொல்லாக மாற்று - தொலைபேசி 
26.தம்ளர் தமிழ் சொல்லாக மாற்று - குவளை 
27.டைப்ரைட்டர் தமிழ் சொல்லாக மாற்று - தட்டச்சுப்பொறி 
28.போட்டோ தமிழ் சொல்லாக மாற்று - புகைப்படம் 
29.யுனிவர்சிட்டி தமிழ் சொல்லாக மாற்று - பல்கலைக்கழகம் 
30.டெலஸ்க்கோப் தமிழ் சொல்லாக மாற்று - தொலைநோக்கி 
31.இண்டெர்நெட் தமிழ் சொல்லாக மாற்று - இணையம் 
32.கவர்னர் தமிழ் சொல்லாக மாற்று - ஆளுநர் 
33.பிளாஸ்டிக் தமிழ் சொல்லாக மாற்று - நெகிழி 
34.நம்மாழ்வார் பிறந்த இடம் - குருகூர் 
35.வாணிகத்தில் மேம்பட்ட ஊர் விருதுபட்டி எனும் பழம் பெயர் துறந்து - விருதுநகர் 
36.செவ்வாய்க்கிழமை சந்தை நடைபெறும் ஊர் -   செவ்வாய்ப்பேட்டை 
37.கபாலீசுரம் சிவாலயத்தை பாடியவர் - திருஞானசம்மந்தர் 
38.கடற்கரையில் உருவாகும் நகரம் - பட்டினம் (நாகப்பட்டினம்)
39.கடற்கரையில் உருவாகும் சிற்றூர் - பாக்கம்(கோடம்பாக்கம்)
40.புலம் எனும் சொல் குறிப்பது - நிலம் (மாம்புலம்)
41.நெய்தல் நிலத்தில் அமைந்த வாழிடங்கள் - குப்பம் (நொச்சிக்குப்பம்)
42.குறில் எழுத்து மாத்திரை அளவு - ஒரு மாத்திரை 
43.நெடில் எழுத்து மாத்திரை அளவு - இரு மாத்திரை 
44.மெய்யெழுத்து மாத்திரை அளவு - அரை மாத்திரை 
45.குற்றால குறவஞ்சி எனும் நூலை இயற்றியவர் - திரிகூட ராசப்பக் கவிராயர் 
46.மின்னார் பொருள் கூறு - பெண்கள் 
47.கமனசித்தர் பொருள் கூறு - வான்வழியே நினைத்த இடத்துக்கு செல்லும் சித்தர்கள் 
48.மந்தி பொருள் கூறு - பெண் குரங்கு 
49.வேணி பொருள் கூறு - சடை 
50.மருங்கு பொருள் கூறு - இடை 
51.மரமும் பழைய குடையும் என்ற பாடலை இயற்றியவர் - அழகிய சொக்கநாதப் புலவர் 
52.அழகிய சொக்கநாதப் புலவர் பிறந்த ஊர் - திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் 
53.இரட்டுற மொழிதல் மற்றொரு பெயர் - சிலேடை 
54.இரட்டுற மொழிதல் பிரித்தெழுது - இரண்டு + உற + மொழிதல் 
55.ஆறு என்பது - வழி, ஓர் எண், நீர் ஓடுகின்ற ஆறு 
56.ஊரும் பேரும் என்ற நூலின் ஆசிரியர் - ரா.பி.சேது பிள்ளை (சொல்லின் செல்வர்)


No comments:

Post a Comment