Thursday 15 September 2016

6ம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம்(part2)

6ம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் முக்கிய வினா விடைகள்: 
PART 2:

1. வைதோரைக் கூட வையாதே ... என தொடங்கும் சித்தர் பாடலை இயற்றிய சித்தர் - கடுவெளி சித்தர் 
2.வெட்ட வெளியை கடவுளாக வழிபட்டவர் - கடுவெளி சித்தர் 
3.கடம் பொருள் கூறு - உடம்பு 
4.இல் பொருள் கூறு - வீடு (பலரில் - பலர் + இல்)
5.ஈ.வெ.ரா  - ஈரோடு வெங்கடப்பர் மகன் ராமசாமி 
6.தமிழகத்தின் மிக பெரிய சிந்தனையாளர் - .வெ.ரா
7.சாதி உயர்வு தாழ்வு அகற்ற பெரியார் அமைத்த சங்கம் - பகுத்தறிவாளர் சங்கம் 
8.பெரியார் காங்கிரசில் யாருடைய தொண்டர் - மகாத்மா காந்தி 
9.மரியாதையும் சுய மரியாதையும் தம் இரு கண்ணாக கருதியவர் - பெரியார் 
10.வைக்கம் வீரர் - பெரியார் (கேரளா வைக்கம் போராட்டத்தில் வெற்றி பெற்றவர்) 
11.பெண்களுக்கு முக்கியம் - அறிவும் சுய மரியாதையும் (பெரியார்)
12.யுனெஸ்கோ  விருது பெரியார் பெற்ற ஆண்டு - 1970
13.பெரியாருக்கு அஞ்சல்தலை வெளியிட்ட ஆண்டு - 1978 
14.பெரியார் காலம் - 17.9.1879 - 24.12.1973
15.நாடாகு ஒன்றோ என தொடங்கும் புறநானூறு பாடலை பாடியவர் - ஒளவையார்
16.புறநானூறு பிரித்தெழு - புறம் + நான்கு + நூறு 
17.சங்க நூல்கள் என்பது - எட்டுத்தொகை(புறநானூறும் ஒன்று) , பத்துப்பாட்டு
18.அரிய நெல்லி கனியை அதியமானிடம் இருந்து பெற்ற அதியமானின் நண்பர் -    ஒளவையார்
19. ஆடவர் பொருள் கூறு - ஆண்கள் 
20.அவல் பொருள் கூறு - பள்ளம் 
21.மிசை பொருள் கூறு - மேடு
22.உட்கார் நண்பா நலம் தான என தொடங்கும் பாடலை பாடியவர் - தாராபாரதி 
23.தாராபாரதி பெற்ற விருது - நல்லாசிரியர் டாக்டர் ராதா கிருஷ்ணன் விருது 
24.தாராபாரதி இயற்றிய நூல்கள் - புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு
25.தமிழ்நாட்டு சிங்கம் - முத்துராமலிங்கர் 
26.வங்காள சிங்கம் - சுபாஷ் சந்திர போஸ் 
27.மனிதனின் மனதை இருள், மருள், தெருள், அருள் என கூறியவர் -  
முத்துராமலிங்கர்
28.தேசியம் காத்த செம்மல் - முத்துராமலிங்கர்(கூறியவர் திரு.வி.க)
29.தெய்வீகம், தேசியம் இரண்டையும் கண்களாக கொண்டவர் -  முத்துராமலிங்கர்
30.வீரமில்லாத வாழ்வும் விவேகம் இல்லாத வீரமும் வீணாகும் என கூறியவர் - முத்துராமலிங்கர்
31. முத்துராமலிங்கருக்கு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு - 1995
32. முத்துராமலிங்கரின் சிறப்பு பெயர்கள் - வேதாந்த பாஸ்கர், பிரணவ கேசரி, சன்மார்க்க சண்ட மாருதம், இந்து புத்த சமய மேதை 
33.முத்துராமலிங்கரின் ஆசிரியர் - குறைவற வாசித்தான் பிள்ளை 
34.முத்துராமலிங்கரின் அரசியல் குரு - சுபாஷ் சந்திர போஸ்
35.சுட்டெழுதுகள் - அ, இ, உ (அப்பையன், இப்பக்கம், உப்பக்கம்(பேச்சு வழக்கில் இல்லை )) 
36.அழுத்தம் கொடுக்கும் எழுத்து - ஏ(அவனே செய்யத்தான் )


No comments:

Post a Comment